ரோகித் சா்மாவின் தோற்றத்தை விமா்சித்து காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் கருத்து: பா...
நடிகர் ஜெய்யின் புதிய படம்!
நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், நடிகர் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். சமூக பிரச்சனை ஒன்றை, காதலும் திரில்லரும் கலந்த கமர்ஷியல் படமாக இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனராம்.
நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: ஆஸ்கர் விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிக்கிறேன்: அனோரா இயக்குநர்
இயக்குநர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நெல்லூர் ஆகிட இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.