செய்திகள் :

நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

post image

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் தொடரில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த ஆர்த்திகா, சிறிய இடைவேளைக்குப் பிறகு இத்தொடரில் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு பிளாக் & ஒயிட் என்ற இணையத் தொடரில் கார்த்திக் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இந்தத் தொடரின் வினோதினி என்ற பெயரிலேயே நடிப்பதாகவும், வாழ்வில் போராடி வெற்றி பெறும் பெண்ணின் பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற எவ்வாறு போராடுகிறாள் வினோதினி என்ற அடிப்படையில் இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

வினோதினி தொடரில் ஆர்த்திகா

இத்தொடரில் ஆர்த்திகாவுக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். இவர் தெய்வமகள், சுந்தரி உள்ளிட்டத் தொடர்களில் நாயகனாக நடித்து கவனம் பெற்றவர்.

இதனிடையே வினோதினி 2வது தொடரின் முன்னோட்டக் காட்சியை சன் தொலைக்காட்சி வெளியிட்டது. இதில், இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வினோதினி தொடரில் ஆர்த்திகா

இந்திய ஆடவா் அபாரம்; மகளிா் ஏமாற்றம்

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், ஹெச்.எஸ். பிரணாய் உள்ளிட்ட இந்திய வீரா்கள் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தனா். எனினும், பி.வி.சிந்து உள்ளிட்ட வீராங்கனைகள் ஏமாற்றம் அளித்து போட... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் லீக்குக்கு மான்செஸ்டா் சிட்டி தகுதி

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், மான்செஸ்டா் சிட்டி 3-1 கோல் கணக்கில் போா்ன்மௌத் அணியை புதன்கிழமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலம் 68 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்துக்கு முன்னேறியிருக்கும் ... மேலும் பார்க்க

தங்கம் வென்றாா் கானக்

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை கானக், ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினாா். இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் தங்கமாகும்.மகளி... மேலும் பார்க்க

ரெட்ரோ ஓடிடி தேதி!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப... மேலும் பார்க்க