செய்திகள் :

நண்பர்களை என்றும் மறக்காத பெண் கொரில்லாக்கள்; 20 ஆண்டுக்கால ஆய்வின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பு!

post image

கிழக்கு ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில் உள்ள வோல்கானோஸ் தேசிய பூங்காவில் இரண்டு தசாப்தங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் பெண் கொரில்லாக்கள் பழகிய பெண் கொரில்லாக்களுடன் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது பல ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், பழகிய கொரில்லாக்களை மீண்டும் காணும் போது அவை ஒரு உணர்ச்சி பிணைப்புகளை காட்டுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண் கொரில்லாக்களிடம் இது போன்ற விஷயங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரில்லா

ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு ஆய்வாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவுகளில் பெண் கொரில்லாக்கள் தங்களுடன் வளர்ந்த ஆண் கொரில்லாக்கள் இருக்கும் குழுக்களை தவிர்ப்பதாக கூறுகிறது.

இது குறித்து ஆய்வின் முதன்மை ஆசிரியரான விக்டோயர் மார்ட்டினாக் கூறுகையில் ”பெண் கொரில்லாக்கள் பலமுறை அதன் குழுக்களை மாற்றுகின்றது. அப்படி பல்வேறு குழுக்களைச் சேர்ந்த ஆண் குழுக்களுடனும் பரிச்சியம் ஆகிறது.

ஆனால் அடுத்த குழுவை தேர்ந்தெடுக்கும் போது ஆண் குழுக்களை தவிர்க்கிறது.

இது கொரில்லாக்கள், யாரை அறிவார்கள் என்பது மட்டுமல்ல அவர்களை எப்படி அறிவார்கள் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.

ஆனால் எத்தனை வருடங்கள் கழித்தாலும் பழகிய பெண் கொரில்லாக்களுடன் மீண்டும் பிணைப்பை பெண் கொரில்லாக்கள் உருவாக்குகின்றன. குறைந்தது 5 வருடங்கள் ஒன்றாக வளர்ந்த அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளில் சந்தித்த பெண் கொரில்லாக்கள் இவ்வாறு நடப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என விக்டோயர் கூறுகிறார்.

துர்நாற்றம் வீசும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதை காண திரண்ட மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

போலந்து நாட்டில் உள்ள வார்சா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான, வார்சா தாவரவியல் பூங்காவில் துர்நாற்றம் வீசும் கார்ப்ஸ் பூ ( Corpse flower) பூப்பதை காண ஏராளமான மக்கள் கூடியுள்ளனர். இந்த அரிய வகை தாவரம் அதன... மேலும் பார்க்க

பசிபிக் பெருங்கடலில் எதிரொலித்த ’பெண் குரல்’ போன்ற மர்ம ஒலி; விஞ்ஞானிகளை திகைப்பில் ஆழ்த்தியது ஏன்?

பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் எதிரொலித்த ஒரு விசித்திரமான ஒலி விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆக்கியுள்ளது. 1999 ஆண்டு ஒலித்த இந்த மர்மமான ஒலி விஞ்ஞானிகளுக்கு இன்று வரை புரியாத புதிராக இருக்கிறது. அமெரிக்கா... மேலும் பார்க்க

ஸ்வீடன்: கோழிகளை கூண்டுகளில் அடைக்காமல் முட்டை உற்பத்தி செய்துவரும் நாடு - பின்னணி என்ன?

உலகளவில் 'விலங்குகள் நலன்’ முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில், ஸ்வீடன் முட்டை உற்பத்தியில் கூண்டுகளை முழுமையாக நீக்கி, அனைத்து கோழிகளையும் கூண்டு இல்லாமல் வளர்க்கும் முதல் நாடாக மாறியுள்ளது. எந்தவொரு அர... மேலும் பார்க்க

3500 ஏக்கர்; பிரபலமான மரக்காணம் உப்பளம்! - பிரமிப்பை ஏற்படுத்தும் டிரோன் காட்சிகள் | Album

மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்பளம்மரக்காணம் உப்... மேலும் பார்க்க

பள்ளி ஆசிரியர்களுக்கு பாம்பு பிடிக்க பயிற்சி – கேரள வனத்துறை முடிவுக்கு காரணம் இதுதான்!

கேரள மாநிலத்தில் மலைகள் ஆறுகள் வனப்பகுதி ஆகியவைகளை இயற்கையாகவே பராமரிப்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறது அரசு. மக்களும் இயற்கை சார்ந்த சுற்றுச்சூழலை பாதுகக்கும் வகையில் செயல்பட்டுவருகின்றனர். அதேச... மேலும் பார்க்க