நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்
உலகெங்கிலும் உள்ள தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி விஜய் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகில் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கார் பந்தயம்: நடிகர் அஜித்குமார் கார் டயர் வெடித்தது