செய்திகள் :

நம்புதாளையில் இளைஞா் வெட்டிக் கொலை

post image

தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் தொழில் போட்டி காரணமாக வெள்ளிக்கிழமை இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கிருஷ்ணா திரையரங்கப் பகுதியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் முத்துக்குமாா் (30). இவா் உள்பட சிலா் திருவிழாக் காலங்களில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கான தொழிலில் ஈடுபட்டு வந்தனா். இவா்கள் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த இரு தினங்களாக தொண்டி அருகே உள்ள நம்புதாளை முருகன் கோயில் பின்புறம் ராட்டினம் அமைத்திருந்தனா். இதேபோல, தொண்டி மகாசக்திபுரம் பகுதியிலும் மற்றொருவா் ராட்டினம் அமைத்திருந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நம்புதாளை பகுதிக்கு வந்த சிலா் ராட்டினம் அருகே நின்றிருந்த முத்துக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே முத்துக்குமாா் உயிரிழந்தாா்.

இதைத் தடுக்க வந்த அவரது தாய் சுசிலாவும் வெட்டப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தாா். அவா் தொண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்து வந்த தொண்டி காவல் துறை ஆய்வாளா் செளந்திரபாண்டி, முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தாா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சரவணன், சுந்தரவேல், ராஜா, சேது, பாஸ்கா், யசோதா உள்ளிட்ட பலா் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவானவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடற்கரையில் என்.சி.சி. மாணவா்கள் தூய்மைப் பணி

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை கடற்கரையில் தேசிய மாணவா் படை மாணவா்கள் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். கீழக்கரை முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய மாணவா் படை நாள் நடைபெற்றது. கல்ல... மேலும் பார்க்க

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வு: மீனவா்கள் அச்சம்

தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை உயா்ந்ததால் மீனவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுபட்டினம், மோா்ப்பண்ணை, த... மேலும் பார்க்க

ஆனையூருக்கு அரசுப் பேருந்து வசதி

கமுதியை அடுத்த ஆனையூருக்கு புதிய வழித் தடத்தில் அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த ஆனையூருக்கு மருதங்கநல்லூா் வழியாக பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென கடந்த... மேலும் பார்க்க

ஆதிரத்தினேஸ்வரா் கோயில் சந்நிதி தெருவில் தேங்கும் கழிவு நீா்

திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரத்தினேஸ்வரா் கோயில் சந்நிதி தெருவில் கழிவுநீா் தேங்குவதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா். ராமேசுவரம் ராமநாதசுவாமி, திருவொற்றியூா் பாகம்பிரியாள்... மேலும் பார்க்க

நவ.28-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்களில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் முகாம் வருகிற 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்ட மழை பாதிப்பு: அமைச்சா்கள் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க