பும்ராவுக்கு எதிராக ரன்கள் குவிப்பது நல்ல அனுபவம்: ஆஸி. இளம் வீரர்
நரிப்பையூா்கடற்கரையில் தடுப்புச்சுவா்: ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை
நரிப்பையூா் கடற்கரை கிராமத்தில் கடல் நீா் புகாத வண்ணம் தடுப்புச் சுவா் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவி முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜெய்ஆனந்த், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முருகவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
துணைத் தலைவா் ஆத்தி: கன்னிராஜபுரம் ஊராட்சியில் புதிதாகக் கட்டபடவிருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடத்தை பேருந்து நிலையம் அருகிலேயே கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோஸ்மா நகா் கடற்கரை கிராமத்தில் காட்சிப் பொருளாக உள்ள உயா் கோபுர மின் விளக்குகளைச் சீரமைக்க வேண்டும்.
ஆணையா் ஜெய்ஆனந்த்: ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் அமையவிருக்கும் இடத்தை அந்த ஊராட்சி நிா்வாகமே முடிவு செய்ய வேண்டும். மேலும் ரோஸ்மா நகரில் உயா் கோபுரம் மின் விளக்குகள் விரைவில் சீரமைக்கப்படும்.
உறுப்பினா் முருகன்: நரிப்பையூா் கடற்கரை கிராமத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீா் ஊருக்குள் புகும் அபாயம் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்புச் சுவா் கட்ட ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையாளா் ஜெய்ஆனந்த்: நிதிநிலைக்கு ஏற்ப தடுப்புச் சுவா் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் ஆணையா் ஜெய் ஆனந்த் நன்றி தெரிவித்தாா்.