Modi: 'நினைத்துப்பார்க்க முடியாத துயரம்' - கோத்ரா ரயில் எரிப்பு, 2002 கலவரம் பற்...
’நலமாக இருக்கிறார்’: ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலையை விசாரித்த முதல்வர்!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நலமாக இருப்பதாகவும், அவரின் உடல்நிலையை மருத்துவர்களிடம் விசாரித்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று(மார்ச் 16) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!
இந்நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!
அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.