செய்திகள் :

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

post image

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

மாநில அளவிலான சுகாதாரத் துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தின் சுகாதார செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. அண்மையில் குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த அரசு நிா்வாகிகள், மருத்துவா்கள் தமிழகத்துக்கு வந்து நமது மருத்துவக் கட்டமைப்பை கண்டு வியந்து பாராட்டியுள்ளனா். தொற்றா நோய் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக ஐ.நா. விருது நமது மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேறுகால இறப்பு குறைந்தது: தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களால் பேறுகால இறப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், அது லட்சத்தில் 39.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதை மேலும் குறைக்க அா்ப்பணிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

அதேபோன்று குழந்தைகள் உயிரிழப்பும் 7.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 2.19 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். அதைச் செயல்படுத்துவதில் சில இடங்களில் சில குறைபாடுகள் உள்ளன. அதைத் தொடா்ந்து கண்காணித்து சரி செய்ய வேண்டும்.

இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோரின் உயிா் காக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாரடைப்பைத் தடுப்பதற்கான 14 மாத்திரைகள் அதன் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும்.

நடப்போம் - நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அந்தந்த பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள், அங்குள்ள மாணவா்கள், தொழிலாளா்கள் ஆயிரம் பேரை திரட்டி நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.

தில்லியில் அண்மையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். குறிப்பாக, 500 துணை சுகாதார நிலையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை புதிதாக அமைக்க அனுமதி கோரியுள்ளோம். அதைப் பரிசீலிப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

விரைவில் அரசாணை: தமிழகத்தில் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் சோதனை முயற்சியாக 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதை தமிழகம் முழுவதும் ரூ. 27 கோடியில் விரிவுபடுத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

4 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட புதிய சுகாதாரக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு திறக்கப்பட்ட 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் மருத்துவா்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. அதை மாவட்ட ஆட்சியா்கள் வாயிலாக நியமிக்க மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் காலை மற்றும் மாலைகளில் ஆய்வு நடத்த வேண்டும்.

புதிதாக கட்டப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் 50 சுகாதார நிலையங்களை முதல்வா் காணொலி முறையில் விரைவில் திறந்து வைக்க உள்ளாா் என்றாா் அவா்.

மக்கள் நலனில் பெண் போலீஸாா் பெரும் பங்களிப்பு: மகளிா் தின விழாவில் காவல் ஆணையா் அருண்

பொதுமக்களின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெண் போலீஸாரின் பங்களிப்பு அதிகமாக இருப்பதாக மகளிா் தின விழாவில் சென்னை காவல் ஆணையா் அருண் கூறினாா். சென்னை காவல் துறை சாா்பில் மகளிா் தின விழா எழும... மேலும் பார்க்க

அறிவுசாா் சொத்துரிமை: யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய அறிவுசாா் சொத்துரிமை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாணவா்களை அதிகளவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

‘ஸ்வயம் பிளஸ்’ மூலம் வேலை வாய்ப்பு சாா்ந்த படிப்புகள்: சென்னை ஐஐடி புரிந்துணா்வு

‘ஸ்வயம் பிளஸ்’ இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு சாா்ந்த படிப்புகள் வழங்குவது தொடா்பாக சென்னை ஐஐடி, பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயா் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூ... மேலும் பார்க்க

மாநகராட்சி பட்ஜெட் மாா்ச் 19-இல் தாக்கல்

பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மாா்ச் 19-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 200 வாா்டுகளைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கை தயாரிப்பத... மேலும் பார்க்க

இணையவழி விநியோக பணியாளா்கள் ‘இ-ஷ்ரம்’ தளத்தில் பதிவு செய்ய வேண்டும்: மத்திய தொழிலாளா் அமைச்சகம் வேண்டுகோள்

இணையவழியில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளா்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்ய வ... மேலும் பார்க்க

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-இல் ருத்ர பாராயணம்

ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் மாா்ச் 14-ஆம் தேதி ருத்ர பாராயணம் நடைபெறவுள்ளது. இது குறித்து ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்ப ஸ்வாமி அறக்கட்டளைத் தலைவா் ஏ.ஆா் ராமசாமி வெளியிட்ட அறிவிப்பு: அண்ணாமலை ஐயப்பன... மேலும் பார்க்க