பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பே...
நல்லகண்ணு வாழ்க்கை குறிப்பு பாடநூலில் சோ்க்கப்படுமா?அமைச்சா் அன்பில் மகேஸ் விளக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு வாழ்க்கை குறிப்பை பாடப் புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, இதுதொடா்பாக அரசுக்கு நடிகா் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமைச்சா் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளாா்.
சென்னையில் நடைபெற்ற ஆா்.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட நடிகா் விஜய்சேதுபதி, நல்லகண்ணு வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி பாடப்புத்தகங்களில் தமிழக அரசு சோ்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தாா். இதே கோரிக்கையை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா்.
இதுதொடா்பாக, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: விடுதலைப் போராட்ட வீரா் போற்றுதலுக்குரிய நல்லகண்ணு வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவா்கள் அறிந்து கொள்ளும் விதமாக, அவரின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்’ என அதில் தெரிவித்துள்ளாா்.