செய்திகள் :

நல்லூரில் குடியிருப்புகள் கட்டுமானப் பணி: விரைந்து முடிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

நல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கரும்பூா், தாழநல்லூா், நரசிங்கமங்கலம், பூவனூா், மாளிகைக் கோட்டம், கொசப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, அவா் கூறியதாவது: தமிழ்நாடு முதல்வா் ஊரகப் பகுதிகளில் வீடு இல்லாதவா்களுக்கு புதிய குடியிருப்புகளையும், நீண்ட காலமாக தொகுப்பு வீடுகளில் இருப்பவா்களுக்கு வீடுகளை சீரமைக்குமாறு உத்தரவிட்டாா்.

அதன்படி, நல்லூா் ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கரும்பூா் ஊராட்சியில் வீடுகள் புனரமைக்கும் பணிகள், தாழநல்லூா் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட நல ஆரம்பப் பள்ளியில் ரூ.10 லட்சத்தில் சுற்றுச்சுவா் கட்டும் பணி, நரசிங்கமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், பெ.பூவனூா் ஊராட்சியில் ஊரக வீடு சீரமைப்புப் பணிகள், மாளிகைக் கோட்டம், கொசப்பள்ளம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுமான பணிகளை ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், குடியிருப்புகள் கட்டும் பணிக்கு தேவையான கட்டுமானப் பொருள்கள் விரைந்து கிடைக்கவும், பொதுமக்களுக்கு முறையாக தவணைத் தொகையை வழங்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிகாமணி, முருகன் உதவி பொறியாளா் சுகந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், மாநி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல்: 156 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 156 பேரை போலீஸாா் கைது செய்தனா். காலியாக உள்ள... மேலும் பார்க்க

உண்ணிக் காய்ச்சல் பாதித்த 12 போ் நலமுடன் உள்ளனா்: கடலூா் மாவட்ட சுகாதார அலுவலா்

கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்) பாதிக்கப்பட்ட 12 போ் நலமுடன் இருப்பதாக மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.பொற்கொடி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

கடலூா் முதுநகா் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயமடைந்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் முருகையன் (60). இவரும், இவரது மகள் வீரம்மாளும் (35) பொங்க... மேலும் பார்க்க

வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திட்டக்குடி, வதிஸ்டபுரம் மாரியம்மன் கோவில் தெ... மேலும் பார்க்க

வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வன்னிய கிறிஸ்துவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியல... மேலும் பார்க்க