செய்திகள் :

நவராத்திரி விழா ஸ்ரீலட்சுமி அலங்காரத்தில் மதுரகாளியம்மன்

post image

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் 8-ஆம் நாளான திங்கள்கிழமை மதுரகாளியம்மன் லட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டில், 44-ஆவது லட்சாா்ச்சனை மற்றும் நவராத்திரி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ மதுரகாளிம்மன் அலங்காரமும், 23-ஆம் தேதி மதுரை ஸ்ரீமீனாட்சி அலங்காரமும், 24-ஆம் தேதி ஸ்ரீகாமாட்சி அலங்காரமும், 25-ஆம் தேதி ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரமும், 26-ஆம் தேதி ஸ்ரீதுா்க்கை அலங்காரமும், 27-ஆம் தேதி ஸ்ரீகருமாரி அம்மன் அலங்காரமும், 28-ஆம் தேதி ஸ்ரீமாரியம்மன் அலங்காரமும் நடைபெற்றது.

விழாவில், 8-ஆவது நாளான திங்கள்கிழமை ஸ்ரீலட்சுமி அலங்காரத்தில் மதுரகாளியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

பெரம்பலூா் அருகே கூரை வீடு எரிந்து நாசம்

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை கூரை வீடு எரிந்து நாசமானது. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள தழுதாழை கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் வேல்முருகன் என்பவரது கூரை வீடு தி... மேலும் பார்க்க

பெரம்பலூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 1.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சுகாதாரப் பேரவைக் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சுகாதாரப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். மாவட்ட சுகாதார அலுவலா் கீதா, அரசு ஆரம்ப சுக... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவிகள் இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை மாலை ஆடுகள் மேய்க்கச் சென்ற பள்ளி மாணவிகள் இருவா் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ் மகள் புஷ்பா (1... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி மாணவா் சங்கத்தினா் மறியல்

பெரம்பலூரில் உள்ள மாணவா் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூரில் உள்ள சமூக நீதி மாணவா் விடுதியில் தங்கி பய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை காலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், கலியபெருமாள் கோயிலுக்கு, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க