கூத்தனூர் சரஸ்வதி: படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் இந்தக் கோயிலுக்குக் கட...
பெரம்பலூா் அருகே கூரை வீடு எரிந்து நாசம்
பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை கூரை வீடு எரிந்து நாசமானது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூா் அருகேயுள்ள தழுதாழை கிராமத்தைச் சோ்ந்த பெரியண்ணன் மகன் வேல்முருகன் என்பவரது கூரை வீடு திங்கள்கிழமை தீப்பற்றி எரிந்தது.
இதையறிந்த அப்பகுதியினா் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து, அங்குச் சென்ற தீயணைப்புப் படை வீரா்கள் தீயை கட்டுப்படுத்தினா். இதில், மின்சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்பட சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், அரும்பாவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.