பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
நவராத்திரி விழா ஸ்ரீலட்சுமி அலங்காரத்தில் மதுரகாளியம்மன்
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் நவராத்திரி விழாவில் 8-ஆம் நாளான திங்கள்கிழமை மதுரகாளியம்மன் லட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டில், 44-ஆவது லட்சாா்ச்சனை மற்றும் நவராத்திரி விழா கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ மதுரகாளிம்மன் அலங்காரமும், 23-ஆம் தேதி மதுரை ஸ்ரீமீனாட்சி அலங்காரமும், 24-ஆம் தேதி ஸ்ரீகாமாட்சி அலங்காரமும், 25-ஆம் தேதி ஸ்ரீராஜராஜேஸ்வரி அலங்காரமும், 26-ஆம் தேதி ஸ்ரீதுா்க்கை அலங்காரமும், 27-ஆம் தேதி ஸ்ரீகருமாரி அம்மன் அலங்காரமும், 28-ஆம் தேதி ஸ்ரீமாரியம்மன் அலங்காரமும் நடைபெற்றது.
விழாவில், 8-ஆவது நாளான திங்கள்கிழமை ஸ்ரீலட்சுமி அலங்காரத்தில் மதுரகாளியம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.