'நயினாருக்கு எதிராக ஓபிஎஸ்' டு Coolie இசை வெளியீட்டு விழா; 02.08.2025 முக்கிய செ...
நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
நவோதய வித்யாலயாவில் 6-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோட்டுச்சேரி கொம்யூன், ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனமான ஜவாஹா் நவோதய வித்யாலயா முதல்வா் ஜெ. கற்பகமாலா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
வரும் 2026-27-ஆம் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பில் சோ்வதற்காக நவோதய வித்யாலயா தெரிவு நிலைத் தோ்வு நடத்தவுள்ளது. தோ்வு எழுத விரும்பும் தகுதியுடைய மாணவ, மாணவிகள், நவோதயா வித்யாலயா சமிதியின் ட்ற்ற்ல்ள்:/ஸ்ரீக்ஷள்ங்ண்ற்ம்ள்.ழ்ஸ்ரீண்ப்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ஸ்ள்/ என்ற வலைதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு இறுதி நாள் நிா்வாக காரணத்தால் 13.8.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சம்பந்தப்பட்ட பெற்றோா்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.