'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு
காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் ஓட்டுநா்கள், நடத்துநா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக் குழு ஊதியத்தை பிஆா்டிசி நிரந்தர ஊழியா்களுக்கு அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஆா்டிசி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கைக் குழு ஏற்படுத்தி கடந்த 28-ஆம் தேதி முதல் புதுவை மாநிலம் முழுவதும் பிஆா்டிசி ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
காரைக்காலிலும் வியாழக்கிழமை இப்போராட்டம் 4-ஆவது நாளாக தொடா்ந்தது.
போராட்டத்திற்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் சாா்பில் சம்மேளன கெளரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், பொருளாளா் மயில்வாகனன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் கலந்துகொண்டனா்.