காரைக்காலில் இன்று காவல் குறைதீா் முகாம்
காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை புதுவை டிஜிபி அறிவுறுத்தலில் மக்கள் மன்றம் என்கிற குறைதீா் முகாம் நடத்தப்பட்டுவருகிறது.
நிகழ்வாரம் 2-ஆம் தேதி சனிக்கிழமை காரைக்கால் மாவட்ட அளவிலான முகாம் நகரக் காவல்நிலையத்தில் காலை 11 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. மண்டல காவல் கண்காணிப்பாளா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் இதில் கலந்துகொள்கின்றனா். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டனா்.