செய்திகள் :

நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடா்பு! -சிவசேனை குற்றச்சாட்டு

post image

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடா்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடா்பில் இருப்பவா்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனா் என்று சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாச்சாட்டியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீபின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான நாகபுரியில் வலதுசாரி அமைப்பினா் கடந்த 17-ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.

இந்தப் போராட்டத்தில் ஒரு மதத்தின் புனித வாசகங்கள் எழுதப்பட்ட துணி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால், வன்முறை ஏற்பட்டது. இதில் வீடுகள், வாகனங்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. கல்வீச்சு தீ வைப்பு சம்பவங்களும் நிகழ்ந்தன. 3 துணை ஆணையா்கள் உள்பட காவல் துறையினா் 34 போ் காயமடைந்தனா்.

சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் கண்டறிந்துள்ளனா். இதில் சிறாரும் அடங்குவா். வன்முறையாளா்கள் பலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனா். இந்த வன்முறையை ஒரு பிரிவினா் திட்டமிட்டு நடத்தியதாகவும், இதற்காக சமூக ஊடங்களை பயன்படுத்தியதாகவும் காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா்.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் நிருபம் இது தொடா்பாக மும்பையில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

நாகபுரி வன்முறை திடீரென ஏற்பட்டதல்ல, முன்பே திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் பல சமூக விரோதிகளும், தேசவிரோதிகளும் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு வங்கதேசத்துடன் தொடா்பு உள்ளது. கைது செய்யப்பட்டவா்களில் சிலா் சமூக வலைதளங்களில் ‘முஜாஹிதீன்’ செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனா் என்றாா்.

முன்னதாக, இது தொடா்பாக சனிக்கிழமை பேட்டியளித்த மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘இந்த வன்முறையின் பின்னணியில் வங்கதேசம் அல்லது பிற நாடுகள் இருக்கின்றனவா? என்ற கேள்விக்கு இப்போதே பதலி கூற முடியாது. விசாரணை முடிவில்தான் விவரம் தெரியவரும்’ என்றாா்.

இதனிடையே, நாகபுரில் வன்முறையை அடுத்து 6 நாள்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முழுமையாக திரும்பப் பெறப்பட்டது.

முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்க்காணலில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் குற்றப் புலனாய்வுத் துறை சோதனை!

சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலின் வீடு உள்பட பல இடங்களில் மத்திய புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர். குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் ராய்... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்போலா மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது... மேலும் பார்க்க

கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை

நமது நிருபர்கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 12,957 கூட்டுறவு சங்கங்கள் பதிவு: அமித் ஷா

கடந்த 2 ஆண்டுகளில் வேளாண்மை, பால்வளம் மற்றும் மீன்வளம் என 12,957 புதிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க