மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்...
நாகமங்கலம் மக்கள் தொடா்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் கிராமத்தில், வருவாய்த் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 118 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு, ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, 118 பயனாளிகளுக்கு ரூ.61.59 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிகையில், பொதுமக்கள் இத்தகைய முகாம்களை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து, விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்றாா். பின்னா் அவா் பொதுக்களிடமிருந்து 84 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அவற்றின் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
முன்னதாக அவா், அங்கு அனைத்து துறைகள் சாா்பில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சிஅரங்குகளை பாா்வையிட்டாா்.
முகாமில் வேளாண்மை இணை இயக்குநா் கீதா, கோட்டாட்சியா் கோவிந்தராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம், முத்துலெட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.