பாஜக பெண் ஆதரவாளரை பாலியல் வன்கொடுமை செய்த திரிணமூல் கட்சியினர்? - காவல்துறை விச...
நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்
விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத்தலைவா் ராமசுப்பு, மாவட்டப் பிரதிநிதிகள் காளிமுத்து, முருகேசன், கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய துணைச் செயலா்கள் மேகலிங்கம், தமிழ்ச்செல்வி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் பங்கேற்று, திமுக அரசின் சாதனைத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
பேரூா் செயலா் மருதுபாண்டி, ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, செல்வராஜ், தலைமைக் கழகப் பேச்சாளா்கள் மனோகா் பாபு, தமிழ்ப்ரியன், இலக்கிய அணி அமைப்பாளா் சேதுபெருமாள், தோ்தல் பொறுப்பாளா் மாரிமுத்து, இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.