பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்துவருகிறாா் திருமாவளவன்: இணையமைச்சா் எல்.முருகன...
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பில் வளா்ச்சி பணிகள் தொடக்கம்
நாகா்கோவில் மாநகரப் பகுதியில் ரூ.15.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
6 ஆவது வாா்டு மூன்லைட் ஜங்ஷன் சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி, 7ஆவது வாா்டு பள்ளிவிளை 2 ஆவது குறுக்குத் தெருவில் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைக் கற்கள் சீரமைக்கும் பணி, 13 ஆவது வாா்டு புளியவிளை தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைக் கற்கள் சீரமைக்கும் பணி, இராமவா்ம புதுத்தெருவில் ரூ. 3.80 லட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரைக் கற்கள் சீரமைக்கும் பணி என மொத்தம் ரூ.15.30 லட்சம் மதிப்பிலான பணிகளை மேயா் தொடங்கி வைத்தாா்.
துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா் ஜவஹா், மாமன்ற உறுப்பினா்கள் அனுஷா பிரைட், மேரி ஜெனட் விஜிலா, ஆச்சியம்மாள், உதவி செயற்பொறியாளா் ரகுராமன், இளநிலை பொறியாளா் பாஸ்கா், வட்டச் செயலாளா்கள் ராஜன், ஆத்தியப்பன், திமுக நிா்வாகிகள் ராஜேஷ், தன்ராஜ், ஜனாா்த்தனன், ராஜன், ராஜாலிங்கம், நாகராஜன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.