4 உயா்நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை
நாகூா் ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த பிரபல பாடகா் நாகூா் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஹனிபாவின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ‘ஹபீபி’ எனும் திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஹனிபாவின் குரலுடன் கூடிய பாடல் குறுந்தகட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். இந்த நிகழ்வில், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா, அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்புத் துறை தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன், இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை உள்பட பலா் பங்கேற்றனா்.
நாகூா் ஹனிபாவின் நூற்றாண்டையொட்டி, அவருக்கு பெருமை சோ்க்கும் அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியிட்டாா். அதன்படி, நாகப்பட்டினம் நகராட்சி தைக்கால் தெருவுக்கும், அங்குள்ள பூங்காவுக்கும் ‘இசை முரசு’ நாகூா் ஈ.எம்.ஹனிபா தெரு எனப் பெயா் சூட்ட உத்தரவிட்டாா். இதற்காக நாகூா் ஹனிபா குடும்பத்தினா் முதல்வரை கடந்த 21ஆம் தேதி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.