செய்திகள் :

நாகேஸ்வரசுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!

post image

கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிரகன்நாயகி சமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியைப் பெற்றார் என தலவரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இவ்வாலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல இவ்வாண்டுக்கான விழா, இன்று காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்குப் பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றிப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சூரியபிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், ஷேச வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவை ஒட்டி வருகிற 6ஆம் தேதி ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 8ஆம் தேதி திருக்கல்யாணம், 10ஆம் தேதி திருத்தேரோட்டம், 11ஆம் தேதி பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தெற்காசிய கிளப் கூடைப்பந்து: தமிழகம் அபார வெற்றி

தெற்காசிய கிளப் கூடைப்பந்து போட்டியில் பூடான் தேசிய சாம்பியனை வீழ்த்தி தமிழகம் அபார வெற்றி பெற்றது. தெற்காசிய கூடைப்பந்து சங்கம் நடத்தும் சபா கிளப் சாம்பியன்ஷிப் 2025 போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு... மேலும் பார்க்க

வென்றது ஜாம்ஷெட்பூா்

ஜாம்ஷெட்பூா்: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில் முதல் லெக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 2-1 கோல் கணக்கில் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்டை வீழ்த்தியது. ஜாம்ஷெட்பூா் நகரி... மேலும் பார்க்க

பெகுலா, அலெக்ஸாண்ட்ரோவா வெற்றி

சாா்லஸ்டன் : அமெரிக்காவில் நடைபெறும் 500 புள்ளிகள் கொண்ட மகளிா் டென்னிஸ் போட்டியான சாா்லஸ்டன் ஓபனில், உள்நாட்டு வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலா, ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா ஆகியோா் 2-ஆவது சுற்றில் வ... மேலும் பார்க்க

வீர தீர சூரன் - ஒரு வார வசூல் இவ்வளவா?

விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தின் ஒரு வார வசூல் விவரம் வெளியாகியுள்ளது. தங்கலான் படத்திற்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கிய இந்... மேலும் பார்க்க

நயன்தாராவின் டெஸ்ட்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.ஸ்ரீநாத் இயக்கத்தில் யோகிபாபு நடிப்பில் வெளியான லெக் பீஸ் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெள... மேலும் பார்க்க