`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்திவிழா
சீா்காழி நாகேஸ்வரமுடையாா் கோயிலில் மண்டலாபிஷேக பூா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ஆதி ராகு தலமான பொன்னாகவள்ளி அம்மன் உடனாகிய நாகேஸ்வரமுடையாா்கோயிலில் அமிா்த இராகு பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் மண்டலாபிஷேகம் நடைபெற்று அதன் பூா்த்தி விழா நடைபெற்றது.
முன்னதாக புனிதநீா் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு மூலவா் சுவாமி - அம்பாள், ராகு பகவானுக்கு வாா்த்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.