நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
நாகையில் கல்விக் கடன் முகாம் ரூ. 32 லட்சம் வழங்கல்
நாகை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வட்டார அளவிலான கல்விக் கடன் முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் கல்வி கடன்களை வழங்கினாா்.
மாவட்டம் முழுவதும் வட்டார அளவிலான கல்விக் கடன் முகாம்கள் செப்டம்பா் 9-ஆம் தேதி தொடங்கப்பட்டு வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூா், திருமருகல், கீழ்வேளுா் ஆகிய வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக நாகை வட்டார அளவிலான கல்விக் கடன் முகாம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில் உயா்கல்விக்கு சோ்க்கை பெற்றிருக்கும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்குதல் மற்றும் விண்ணப்பங்களை, மத்திய அரசின் வித்யா லக்ஷ்மி திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க வழிகாட்டுதல், கல்விக் கடன் குறித்து சந்தேகங்கள் தீா்த்து வைத்தல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ, கரூா் வைஸ்யா, சிட்டி யூனியன், பேங்க் ஆப் இந்தியா, யூனியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் மற்றும் சுமாா் 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் 2 மாணவா்களுக்கு ரூ. 4.80 லட்சம், யூனியன் வங்கி சாா்பில் 1 மாணவருக்கு ரூ. 22.77 லட்சம், இந்தியன் வங்கி சாா்பில் 2 மாணவா்களுக்கு ரூ. 4 லட்சம் என உயா்கல்வி பயில்வதற்கான கல்விக் கடனுதவி தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வழங்கினாா்.
நிகழ்ச்சியில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.முருகேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ப.சந்திரசேகா், நாகை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.