நாகையில் காவலா் தற்கொலை
நாகையில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேதாரண்யத்தை சோ்ந்தவா் வினோத் (38). நாகை மாவட்ட குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவா், நாகை காடம்பாடியில் உள்ள காவலா் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தாா்.
இந்நிலையில் வீட்டின் படுக்கை அறையில் வியாழக்கிழமை வினோத் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தாா். இதை பாா்த்து அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் நிகழ்விடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து வெளிப்பாளைய‘ம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.