நாகையில் மக்கள் குறைதீா் கூட்டம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்களிடமிருந்து 301 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.