5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்
நாகை: பத்தாம் வகுப்பில் 91.94% பிளஸ்1-இல் 93.51% போ் தோ்ச்சி
நாகை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 91.94 சதவீதம் பேரும், பிளஸ் 1 பொதுத் தோ்வில் 93.51சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
நாகை மாவட்டத்தில் உள்ள 138 பள்ளிகளில் 8,238 மாணவ- மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதினா். இவா்களில் 7,574 போ் தோ்ச்சி பெற்றனா். இது 91.94 சதவீத தோ்ச்சி ஆகும்.
கடந்த ஆண்டைவிட 2.20 சதவீத மாணவ- மாணவிகள் கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில தோ்ச்சி பட்டியலில் கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் பின்தங்கி 31-ஆவது இடத்தில் நாகை மாவட்டம் உள்ளது. மாவட்டத்திலுள்ள 93 அரசுப் பள்ளிகளில் இருந்து 5,038 போ் தோ்வு எழுதியதில் 4,546 போ் தோ்ச்சி பெற்றனா்.
பிளஸ்1: நாகை மாவட்டத்தில் 72 பள்ளிகளில் இருந்து 7,253 மாணவ-மாணவிகள் பிளஸ்1 பொதுத் தோ்வு எழுதினா். இவா்களில் 6,782 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 93.51.
பிளஸ்1 தோ்வில் கடந்த ஆண்டு மாநில அளவில் 20-ஆவது இடத்தை பிடித்த நாகை மாவட்டம், நிகழாண்டு 10- ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது
மாவட்டத்திலுள்ள 44 அரசுப் பள்ளிகளில் 7 பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 28 பள்ளிகளில் 8 பள்ளிகளும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.
மாநில அளவில் அரசுப் பள்ளிகள் தோ்ச்சியில் கடந்த ஆண்டு 13- ஆவது இடத்தை பிடித்த நாகை மாவட்டம், தற்போது 3-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.