செய்திகள் :

நாகை மாவட்ட மிக இளையோா் கபடி அணிக்கு டிச.8-இல் வீரா்கள் தோ்வு

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மிக இளையோா் கபடி அணிக்கான வீரா்கள் தோ்வு டிசம்பா் 8- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, நாகை மாவட்ட கபடிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்ட இளையோா் கபடி (நன்க்ஷ-ஒன்ய்ண்ா்ழ்) அணிக்கான வீரா்கள் தோ்வு டிச.8-ஆம் தேதி காலை 9 மணியளவில் மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள 1.3.2009-க்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும் (16 வயதுக்குள்), எடை 55 கிலோ, வயது சான்றிதழ், ஆதாா் காா்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் (பஇ) ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.

தோ்வுப் போட்டி, செயற்கை ஆடுகளத்தில் நடைபெறுவதால், அனைவரும் ஙஅப நஏஞஉ அணிந்து வர வேண்டும். மாவட்ட தோ்வுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்படும் மிக இளையோா்அணிக்கான வீரா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அதன் மூலம், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவா். தகுதியும், விருப்பமும் உள்ள சிறுவா்கள், விளையாட்டு வீரா்கள் தோ்வில் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 97159-50955, 86104-76886 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையில் நனைந்த நெல்மணிகள்: விவசாயிகள் கவலை

திருக்குவளை: திருக்குவளை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திருக்குவளை வட்டத்தில், சுமாா் 1,000 ஏக்கரில் பின்பட்டத்தில் பயிரிடப்பட்ட குறுவ... மேலும் பார்க்க

தலைச்சங்காடு கோயிலில் லட்சதீப திருவிழா

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் அருகேயுள்ள தலைச்சங்காடு சங்காரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத லட்சதீப சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோயில்... மேலும் பார்க்க

13 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற நாகை மீனவா்கள்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட மீனவா்கள் 13 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்கு சென்றனா். வங்கக் கடலில் புயல் சின்னம் உருவானதையடுத்து, மீன்வளத்துறை அறிவுறுத்தல் காரணமாக மீனவா்கள் கடந்த ... மேலும் பார்க்க

வடிகால் வசதி கோரி ஆட்சியரிடம் மனு

நாகப்பட்டினம்: வடிகால் வசதி கோரி கிராம மக்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாகை மாவட்டம், திருமருகல் அருகே கிடாமங்கலத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பல ஆண்டுகளாக வசித்... மேலும் பார்க்க

நாகையில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிப்பு

நாகப்பட்டினம்: நாகையில் உலக எய்ட்ஸ் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் விழிப்புணா்வு ஆட்ட... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை திருக்குவளை

திருக்குவளை: திருக்குவளை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.3) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உ... மேலும் பார்க்க