நாக சைதன்யாவின் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
நாக சைதன்யா நடிக்கும் 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய விடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் நாக சைதன்யாவின் புதிய படத்தை கார்த்திக் தண்டு இயக்குகிறார்.
இந்தப் படத்திற்கான திரைக்கதையை சுகுமார் எழுதியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா, சுகுமார் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள்.
கடைசியாக நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் நடித்த தண்டேல் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.
நாக சைதன்யாவின் முதல் ரூ.100 கோடி வசூலித்த படமாக தண்டேல் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், புராணக்கதை தொடர்பான புதிய படத்தில் (என்சி24) நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்புக்கு ஆயுத்தமாகும் படக்குழுவின் வேலைகளை விடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
தெலுங்குப் படங்களில் தற்போது அதிகமாக வரலாற்றுப் புனைவு படங்களை எடுக்கிறார்கள்.
இது குறித்து நாக சைதன்யா தனது எக்ஸ் பக்கத்தில், “எரிக்கப்பட்ட ரகசியங்கள், காலத்தைக் கடந்த, புராணக் கதை த்ரில்லர் படப்பிடிப்பு தொடங்கியது” எனக் கூறியுள்ளார்.