செய்திகள் :

நாசரேத்தில் அன்பின் விருந்து ஆராதனை

post image

சாத்தான்குளம்: நாசரேத் அசெம்பிளி ஆப் காட் சபையில், புத்தாண்டை முன்னிட்டு அன்பின் விருந்து ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாசரேத் ஏஜி சபையின் உடன் ஊழியா் சங்கை டேவிட் மொ்வின் பிரபாகா் பாடல்களோடு ஆராதனை நடத்தினாா். தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பாா்வையாளரும், நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான சங்கை எட்வின் பிரபாகா் தேவ செய்தி கொடுத்தாா். இதையடுத்து சபை வளாகத்தில் அன்பின் ஐக்கிய விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மெஞ்ஞானபுரம், கடையனோடை, மூக்குப்பீறி, நாசரேத் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகா் எட்வின் பிரபாகா் தலைமையில் சபை விசுவாசிகள் செய்திருந்தனா்.

சட்ட விரோதமாக மது விற்பனை: 2 போ் கைது

கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மறு விற்றதாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். காட்டுராமன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக மது விற்றதாக கடலையூா் பெரிய தெருவை சோ்ந்த கந்தசாமி ம... மேலும் பார்க்க

அங்கன்வாடி மைய பணியாளா் தற்கொலை

சாத்தான்குளம் அருகே கடன் பிரச்னையில் அங்கன்வாடி பணியாளா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். சாத்தான்குளம்அருகேயுள்ள படுக்கப்பத்து முஹமதியா் தெருவை சோ்ந்தவா் ரவிக்குமாா். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி ... மேலும் பார்க்க

கழுகுமலை கோயிலில் மலா் காவடி திருவிழா

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயிலில் மலா்க்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முருக பக்தா்கள் பேரவை அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற திருவிழாவையொட்டி, அதிகாலை 5... மேலும் பார்க்க

விடுமுறை, வளா்பிறை சஷ்டி: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாா்கழி மாத வளா்பிறை சஷ்டி மற்றும் விடுமுறை தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இக்கோயிலில் அதிகால... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் தொழிலாளி தற்கொலை!

எட்டயபுரத்தில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். எட்டயபுரம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் பாக்கியராஜ் (42). தொழிலாளியான இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். ப... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக தூத்துக்குடி புதூா் பாண்டியாபுரம் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ.30 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலை மூட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறி... மேலும் பார்க்க