செய்திகள் :

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு! நடப்பு கூட்டத்தொடரில் ரூ. 135 கோடி இழப்பு!

post image

நடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 21 ஆம் தேதியில் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக் கோரி, இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதுதொடர்பான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்தும் விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவையில் இன்று கேள்விநேரத்தின்போது, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவையை பிற்பகல்வரையில் ஒத்திவைப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைக் கண்டித்த அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், தற்போதைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 56 மணிநேரம் 49 நிமிடங்கள் இழக்கப்பட்டதாகக் கூறி, மாநிலங்களவையையும் பிற்பகல்வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடத்துக்கு ரூ. 2.5 லட்சம் செலவிடப்படுவதாக 2012-ல் மதிப்பீடு வெளியிடப்பட்டது. அப்படியென்றால், தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்துக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ. 4 லட்சம்வரையில் செலவிடப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

இதன்படி, ஒரு மணிநேரத்துக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால், ரூ. 2.4 கோடி செலவாகும்; 56 மணிநேரம் 49 நிமிடங்களுக்கு ரூ. 135.6 கோடி இழக்கப்படுகிறது.

Parliament Monsoon Session Day 14: Both Houses adjourned for the day

10 ச.அடி வீட்டில் 80 வாக்காளர்களா? ராகுல் குற்றச்சாட்டும் சரிபார்ப்பும்!

தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியதுகுறித்து இந்தியா டுடே செய்தி ஊடகம் பெங்களூரில் உண்மை சரிபார்ப்பு நடத்தியது.பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்காளர் முறைகேடு ந... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் கொடூரம்! 3 கி.மீ. தொலைவுக்கு மனித உடல் பாகங்கள்!

கர்நாடகத்தில் சாலையோரங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட மனித உடல் பாகங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் ஒரு கோவில் அருகே வியாழக்கிழமை காலை 8 ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

புதுதில்லி: வாக்காளா் பட்டியல் முறைகேடுகளை கண்டித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூருவில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், வாக்குத் திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசட... மேலும் பார்க்க

உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!

நடிகை ஹுமா குரேஷியின் சகோதரர் பார்க்கிங் பிரச்னையால் கொலை செய்யப்பட்டது குறித்ட்து அவரது மனைவி, “சிறிய பிரச்னைக்கு கொலை செய்துள்ளார்கள்” என அதிர்ச்சியுடன் பேசியுள்ளார்.தென் கிழக்கு தில்லியான போகல் பகு... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: காங்கிரஸ் புலனாய்வு செய்தது எப்படி? விடியா வெளியிட்ட ராகுல்

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் நேற்று குற்றம்சாட்டியிருந்த நிலையில், காங்கிரஸ் எவ்வாறு புலனாய்வு செய்தது என்பது குறித்த விடிய... மேலும் பார்க்க

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க