நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 17 எம்.பி.க்களுக்கு விருது!
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக 17 எம்.பி.க்களுக்கு சன்சத் ரத்னா விருது 2025 வழங்கி கௌரவிக்கப்படவிருக்கிறது.
சன்சத் ரத்னா விருது 2025-க்கு தேர்வானவர்கள்:
சுப்ரியா சுலே
ரவி கிஷன்
நிஷிகாந்த் துபே
அர்விந்த சாவந்த்
ஸ்மிதா உதய் வாக்
நரேஷ் மாஸ்க்
வர்ஷா கெய்க்வாட்
மேதா குல்கர்னி
பிரவீன் படேல்
பித்யூத் பரன் மஹதோ
திலீப் சாய்கியா உள்பட 17 எம்.பி.க்கள்.
தொடர்ச்சியாக 3 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி சிறப்பான செயல்பட்டதற்கான சிறப்பு விருதுக்கு தேர்வானவர்கள்
பார்த்ருஹரி மாதாப்
என். கே. பிரேமசந்திரன்
சுப்ரியா சுலே
ஸ்ரீரங்க் அப்பா பர்னே
நாடாளுமன்ற குழுக்களின் சிறப்பான செயல்பாடுகளைப் பொருத்தவரையில், பார்த்ருஹரி மாதாப் தலைமையிலான நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, டாக்டர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான வேளாண் விவகாரங்களுக்கான நிலைக்குழு ஆகியவற்றின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதத்தில் விருது வழங்கப்படுகிறது.