செய்திகள் :

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை!

post image

நாடாளுமன்றத்தில் வளாகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் புகைப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் புதன்கிழமை காலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மைய மண்டபத்தில் இருக்கும் ராஜீவ் காந்தியின் படத்துக்கு மலர்தூவி இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Senior Congress leaders paid floral tributes to the portrait of former Prime Minister Rajiv Gandhi in the Parliament complex.

இதையும் படிக்க : தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகி... மேலும் பார்க்க

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு! அமித் ஷா மீது தூக்கியெறியப்பட்ட மசோதா நகல்கள்!

அமைச்சர்கள், முதல்வர்களின் பதவிப்பறிப்பு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அரசியலமைப்பு மசோதா (130... மேலும் பார்க்க

தில்லியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: மூவர் பலி!

தில்லியில் தர்யாகஞ்ச் பகுதியில் மூன்று மாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இறந்தவர்கள் ஜுபைர், குல்சாகர் மற்றும் த... மேலும் பார்க்க

கால் லிட்டர்(250 மிலி) பாட்டிலின் விலை ரூ. 125?

இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் பயன்படுத்தும் குடிநீர் பாட்டில்களின் விலை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், த... மேலும் பார்க்க

கேள்வி கேட்டால் தேச துரோகமா..? பத்திரிகையாளர்களுக்கு சம்மன்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜனுக்கு அசாம் காவல் துறையினர் சம்மன் அனுப்பியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தி வயர் இணையதளம் முடக்கம்பாகிஸ்தான் பயங்கரவாதி... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ... மேலும் பார்க்க