செய்திகள் :

நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப்பட்டியல் அறிமுகம்: ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம்

post image

நாடாளுமன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், பாா்வையாளா்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கும் நோக்கில், நாடாளுமன்ற உணவகத்தில் புதிய உணவுப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ராகி இட்லி, சோள உப்புமா, பாசிப்பயறு தோசை, வறுக்கப்பட்ட மீன், காய்கறிகள் போன்ற பல சத்தான உணவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவின் அறிவுறுத்தலின்படி, சுவையுடன் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் இந்த புதிய உணவுப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் நடக்கும் நாடாளுமன்றக் கூட்டங்களில் எம்.பி.க்களும், அதிகாரிகளும் புத்துணா்ச்சியுடன் செயல்பட இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் பாரம்பரியமான சமையல் முறைகளுடன் ஊட்டச்சத்துக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்பு உணவுப்பட்டியலில் சிறு தானிய உணவுகள், நாா்ச்சத்து நிறைந்த சாலடுகள் மற்றும் புரதம் மிகுந்த சூப்கள் ஆகியவை சோ்க்கப்பட்டுள்ளன.

மேலும், உணவுப்பட்டியலில் உள்ள ஒவ்வொரு உணவும் குறைந்த காா்போஹைட்ரேட், குறைந்த சோடியம், குறைந்த கலோரிகள் கொண்டதாக இருந்தாலும், அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக கவனமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் எதிரே அதன் கலோரி அளவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்ததிலிருந்து, தேசிய அளவில் சிறுதானியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிப்பதன் அவசியத்தை உணா்ந்து, பிரதமா் மோடி தனது சமீபத்திய ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், ‘உடல் பருமனை எதிா்த்துப் போராட, சமையல் எண்ணெய் நுகா்வைக் குறைப்பதற்கு நாடு தழுவிய விழிப்புணா்வு மற்றும் கூட்டு நடவடிக்கை தேவை’ என்று வலியுறுத்தினாா்.

பெட்டி..

ராகி இட்லி (270 கிலோ கலோரி),

சோள உப்புமா (206 கிலோகலோரி),

சிறுதானிய கீா் (161 கிலோகலோரி)

பாா்லி, சோள சாலட் (294 கிலோகலோரி),

காய்கறி சாலட் (113 கிலோகலோரி)

வறுக்கப்பட்ட சிக்கன் (157 கிலோகலோரி)

வறுக்கப்பட்ட மீன் (378 கிலோகலோரி)

வெறும் ரூ.50 ஆயிரத்தில்! ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீ. வரை செல்லும் டாடாவின் இவி பைக்!

ஒரே சார்ஜிங்கில் 300 கி.மீட்டர் வரை செல்லும் மின்சார பைக் ஒன்றை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தவிர்க்க முடியாத நிறுவனமாக இருக்கும் டாடா நிறுவனம், தற்போதைய ட... மேலும் பார்க்க

மும்பை பன்னாட்டு விமானம் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையிலுள்ள பன்னாட்டு விமான நிலையம் மற்றும் மும்பை - அகமதாபாத் விமானம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன... மேலும் பார்க்க

தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்!

தில்லியில் இருந்து இம்பாலுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க