சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
நாட்டில் பல்வேறு விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடல்!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஸ்ரீநகர் மற்றும் சண்டிகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் குறைந்தது 24 விமான நிலையங்கள் மே 15ஆம் தேதி வரை மூடப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலைக் கருத்தில் கொண்டு இந்த விமான நிலையங்கள் மே 10 ஆம் தேதி வரை பொதுமக்களுக்காக மூடப்பட்டிருந்தது.
போர் சுழல் ஏற்பட்டுள்ளதையடுத்து, மே 15 ஆம் தேதி வரை குறைந்தது 24 பயணிகள் விமான நிலையங்கள் மூடப்படுவதாக தெரிவித்துள்ள நிலையில் அவற்றின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, புந்தர், கிஷன்கர், பாட்டியாலா, சிம்லா, தர்மசாலா மற்றும் பதிண்டா உள்ளிட்ட விமான நிலையங்கள் அடங்கும்.
அதே வேளையில் ஜெய்சால்மர், ஜோத்பூர், லே, பிகானேர், பதான்கோட், ஜம்மு, ஜாம்நகர் மற்றும் பூஜ் ஆகிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் பயணத்திற்கான செல்லுபடியாகும் டிக்கெட்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மறு திட்டமிடல் கட்டணங்களில் ஒரு முறை சலுகை அல்லது ரத்து செய்தலுக்கான முழு பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 686 பில்லியன் டாலராக சரிவு!