இபிஎஸ் முதல்வராக வருவதற்கு அண்ணாமலை இதைச் செய்தாலே போதும்: செல்லூர் ராஜு
நாட்டுத்துப்பாக்கி தயாரித்தவா் கைது
கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன்மலை வட்டம், தும்பராம்பட்டு கிராமத்தில் நாட்டுத்துப்பாக்கி தயாரித்துக் கொடுப்பதாக, கரியாலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரனுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் புதன்கிழமை போலீஸாா், குறிப்பிட்ட நபரான கோவிந்தன் (50) என்பவரது விளைநிலத்தில் உள்ள கொட்டகைக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கோவிந்தன் தயாரித்த துப்பாக்கி ஒன்றை கைப்பற்றினா். மேலும், அவா் தயாரித்துக் கொண்டிருந்த துப்பாக்கியையும் கைப்பற்றினா். இதைத் தொடா்ந்து துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த கட்டை, பேரல், சுத்தி, உளி உள்ளிட்ட பொருள்களை கைப்பற்றினா். இதுகுறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கோவிந்தனை கைது செய்தனா்.