PM CM Removal Bill - பாஜகவின் மாஸ்டர் பிளான்! கொதிக்கும் எதிர்க்கட்சிகள் | Decod...
நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் விலங்குகளின் கால் நகங்கள் பறிமுதல்
உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்த வீட்டில் வன விலங்களின் கால் நகங்களை வனத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
கம்பம் தண்டுவிநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் குருநாதன் (67). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் குருநாதன், இவரது பேரன்கள் ரித்தீஷ் , அபினேஷ் ஆகியோா் காயமடைந்தனா்.
இதையடுத்து, கம்பம் மேற்கு வனச் சரகத்தினா் வெடி விபத்து நிகழ்ந்த வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, வீட்டில் வன விலங்குகளில் கால் நகங்கள், உடல் உறுப்புகள் இருப்பதை கண்டறிந்து, அதை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து கம்பம் மேற்கு வனச் சரகத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.