செய்திகள் :

`நான் கறுப்பு, என் கணவர் வெள்ளை என விமர்சித்தனர்'- ஆதங்கப்பட்ட கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்

post image

கேரள மாநிலத் தலைமைச் செயலாளராக இருப்பவர், டாக்டர் வி.வேணு-வின் மனைவி சாரதா முரளிதரன். கேரளா அரசின் பிளானிங் அடிஷனல் சீஃப் செக்கரட்டரியாக இருந்த சாரதா முரளிதரன், தனது கணவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி ஓய்வுபெற்றதை அடுத்து, தலைமைச் செயலாளராகப் பதவியேற்றார். கணவனைத் தொடர்ந்து மனைவி கேரள மாநிலத் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றது அபூர்வ நிகழ்வாக கருத்தப்பட்டது. இந்த நிலையில் கேரள தலைமைச் செயலாளரான சாரதா முரளிதரன், தனது முகநூலில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், தனது உடல் நிறத்தையும், தன் கணவர் வி.வேணு-வின் நிறத்தையும் சுட்டிக்காட்டி தன்னை ஒருவர் விமர்சித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நேற்று காலையில் பதிவேற்றம் செய்த அந்தப் பதிவை சில மணி நேரத்தில் நீக்கினார் சாரதா முரளிதரன். பின்னர் நேற்று இரவு அது சம்பந்தமான விளக்கத்துடன் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை சாரதா முரளிதரன் பகிர்ந்தார். அதில், கூறியுள்ளதாவது:

``எனது நிறம் கறுப்பு என்றும், என் கணவரின் நிறம் வெள்ளை எனவும் ஒரு கமென்ட் வந்ததாக முதலில் நான் முகநூலில் பதிவிட்டிருந்தேன். அந்த பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் வருத்தத்தை ஏற்படுத்தியதை அடுத்து அந்தப் பதிவை நீக்கினேன்.

கணவர் வேணு-வுடன் கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்

இது விவாதிக்கப்படவேண்டிய கருத்துதான் என என் நலம்விரும்பிகள் தெரிவித்ததைத் தொடர்ந்தே மீண்டும் பதிவிட்டுள்ளேன். தலைமைச் செயலாளர் என்ற நிலையில் கடந்த ஏழு மாதங்களாக என் செயல்பாடுகள் கறுப்பு எனவும், என் கணவரான முன்னாள் தலைமைச் செயலாளரின் செயல்பாடுகளின் நிறம் வெள்ளை எனவும் விமர்சித்தனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. கறுப்பு என்பது வெறும் நிறம் மட்டுமல்ல. அது கெட்ட விஷங்களையும், துக்கம் போன்றவற்றையும் குறிக்கிறது. ஆனால், ஏன் கறுப்பானவர்களை அவமதிக்க வேண்டும். கறுப்பு நிறத்தை எதற்காக இவ்வளவு மோசமாகப் பார்க்க வேண்டும். கறுப்பு மிகவும் அழகான நிறம். எதற்காக கறுப்பு நிறத்தை நிந்தனை செய்யவேண்டும்.

கேரள மாநிலத் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன்

இந்த பிரபஞ்சத்தில் வியாபித்திருப்பது கறுப்பு என்பதுதான் உண்மை. கறுப்பு நிறம், எதையும் ஏற்றுக்கொள்ளும் திறன்கொண்ட நிறமாகும். கார்மேகத்தின் நிறமும் கறுப்புதான். என்னை மீண்டும் கருவறைக்குள் கொண்டுசென்று வெள்ளை நிற அழகியாக்கி மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியுமா என நான்கு வயது இருக்கும் சமயத்தில் நான் என் அம்மாவிடம் கேட்டிருக்கிறேன். போதுமான நிறம் இல்லை என்ற வருத்தத்துடன் கடந்த ஐம்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். கருமையின் அழகை அடையாளம் கண்டுகொள்ளா, வெள்ளை தோலால் ஈர்க்கப்பட்டு ஈர்க்கப்படுவது போன்ற நிலையில் வாழ்வதற்கு நான் பிராயசித்தம் செய்யவேண்டும். கறுப்பில் நான் கண்டுபிடிக்காத அழகை என் குழந்தைகள் கண்டார்கள். கறுப்பு அழகானது என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தினார்கள். கறுப்பு அழகானது என்பது எனக்குப் புரிகிறது." என அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

`ஓய்வு குறித்து விவாதிக்க ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றாரா பிரதமர் மோடி?’ - பரவும் தகவலின் பின்னணி

பிரதமராக நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு கடந்த 10 ஆண்டில் ஒரு முறை கூட ஆர்.எஸ்.எஸ்.தலைமை அலுவலகத்துக்கு சென்றது கிடையாது. தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்.. பா.ஜ.கவின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுப... மேலும் பார்க்க

"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமணி ராமதாஸ்

சீன கார் நிறுவனத்தின் ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது குறித்து அன்புமணி ராமதாஸ், " சீனாவைச் சேர்ந்த மின்சார மகிழ... மேலும் பார்க்க

`நீட் ரகசியம் கேட்டால், உசேன் போல்டை விட வேகமாக ஓடுகிறார் உதயநிதி’ - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "தமிழக முழுவதும் 234 தொகுதிகளில் 68,500 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் பூத... மேலும் பார்க்க