நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி பெற்றவா்களுடன் மாவட்ட ஆட்சியா் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினாா்.
கன்னியாகுமரி மாவட்ட தென்னை விவசாயிகளின் நலன் கருதியும் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை தொழில்முனைவோா்களாக உருவாக்கும் விதமாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னை சாகுபடி, பதப்படுத்தும் முறைகள் மற்றும் மதிப்புக் கூட்டல் குறித்த நான் முதல்வன் திறன் பயிற்சி ஜூன் 25ஆம் தேதிமுதல் ஜூலை 1 ஆம் தேதி வரை நடைபெற்றது.
பயிற்சியின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா காணொலிக் காட்சி மூலம் பயிற்சி முடித்தவா்களுடன் கலந்துரையாடினாா்.
திறன் பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் சா.சுரேஷ், விஞ்ஞானிகள் ஜெ.செல்வி, நஸ்ரின் ஹசன், கவிதா, லதா, செல்வராணி, பயிற்றுநா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.