நான் முதல்வன் திட்டம்: 41.3 லட்சம் பேர் பயன்!
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், இதுவரையில் 41.3 லட்சம் பேர் பயன்பெற்றிருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, திட்டத்தின்கீழ் இதுவரையில் பயிற்சி பெற்றவர்கள் குறித்த தகவல்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ், மொத்தம் 41,38,833 பேர் பயன்பெற்ற நிலையில், அவர்களில் 25,63,235 பேர் கலை மற்றும் அறிவியல் படிப்பிலும், 10,91,022 பேர் பொறியியல் படிப்பிலும் பயன்பெற்றுள்ளனர்.
மேலும் தொழில்நுட்பக் கல்வியில் 3,77,235 பேரும், ஐடிஐ படிப்பில் 1,07,341 பேரும் பயன்பெற்றுள்ளனர்.