செய்திகள் :

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

post image

மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி 11 மாத காயத்துக்குப் பிறகு அணியில் இணைந்துள்ளார்.

கடந்த முறை பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி தான் ஒன்றும் மெஸ்ஸி கிடையாது எனக் கூறியது கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த சீசனில் பேலந்தோர் விருது (தங்கப் பந்து) விருதை மிட்ஃபீல்டரான இவர் வாங்கியது மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.

காயத்திலிருந்து மீண்டுவந்த ரோட்ரி

ஏசிஎல் காயத்தினால் 11 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அவர் வந்த முதல் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-2 என கடைசி நேரத்தில் தோற்றது.

2023-24 சீசனில் 3 பிரீமியர் லீக் போட்டியில் மட்டுமே தோற்றிருந்தது. அந்தாண்டுக்கான தங்கப் பந்து விருதைதான் ரோட்ரி வென்றிருந்தார்.

தற்போது, ஆகஸ்ட் மாதத்தில் மான்செஸ்டர் சிட்டி 4 போட்டிகளில் 2 மட்டுமே வென்றுள்ளது.

நான் மெஸ்ஸி கிடையாது

இந்நிலையில், ரோட்ரி கூறியதாவது:

நான் ஒன்றும் மெஸ்ஸி கிடையாது. நான் வந்ததும் அணியை மிகப்பெரிய சக்தியாக மாற்ற முடியாது.

அணியை என்னால் எல்லா போட்டிகளிலும் வெற்றியடைய செய்ய முடியாது. அது ஒரு கூட்டு முயற்சி. கடந்த காலங்களில் வென்றதற்கு அணி வீரர்களே காரணம்.

என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே குணமாகி வந்திருக்கிறேன். சர்வதேச போட்டிகளுக்கான இடைவெளி முடிந்து வந்ததும் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன் என்றார்.

Rodri insists his return to fitness will not automatically turn Manchester City into the dominant force of old.

டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!

சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் முன்பதிவைவிட கான்ஜுரிங் படத்திற்கு டிக்கெட்கள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவான மதராஸி திரைப... மேலும் பார்க்க

திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு: திரளானோர் பங்கேற்பு!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள கபர்தீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.தமிழக அரசு நிதி நாலரை கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்யப்பட்டு... மேலும் பார்க்க

எஸ்டிஆர் - வெற்றி மாறன்... அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தாணு!

சிம்பு, வெற்றி மாறன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு அப்டேட் கொடுத்துள்ளார். நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகிறது. வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் ... மேலும் பார்க்க

கூலி ஓடிடி தேதி!

கூலி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப்... மேலும் பார்க்க

ஓடிடியில் கண்ணப்பா!

பான் இந்திய நடிகர்கள் நடித்த கண்ணப்பா ஓடிடியில் வெளியாகியுள்ளது.தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்த ‘கண்ணப்பா’ உலகம் முழுவதும் கடந்த ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிய... மேலும் பார்க்க

ஓடிடியில் நடிகர் தர்ஷனின் சரண்டர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷனின் ‘சரண்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.இயக்குநர் கௌதமன் கணபதி இயக்கத்தில், தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ’சரண்டர்’. கிரைம்... மேலும் பார்க்க