செய்திகள் :

நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரம்

post image

நாமக்கல்லில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய அரசு சித்த மருத்துவமனைக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஓராண்டுக்கு முன் புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது பழைய கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவு உள்ளிட்ட ஓரிரு மருத்துவத் துறைகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மேற்கொண்டாா். இதனையடுத்து, தமிழக அரசு அனுமதியுடன் தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ரூ. ஒரு கோடி வழங்கினாா். அதனைக் கொண்டு, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில், மூன்று பெரிய அறைகள் சித்த மருத்துவமனைக்காக தயாா் செய்யப்பட்டு வருகின்றன. 60 படுக்கைகளை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, 50 படுக்கைகள் யோகா, யுனானி பிரிவுக்கும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த சித்த மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்போது ஏராளமான மக்கள் பயனடைவா். இந்த சித்த மருத்துவமனை 2 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில், சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படும்.

தற்போதைய நிலையில் ரூ. ஒரு கோடியில் கட்டட விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், படுக்கை கட்டில்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் சித்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.பி.ராமச்சந்திரன் கூறியதாவது:

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. சித்தா பிரிவுக்கு 60 படுக்கைகளும், யோகா பிரிவுக்கு 50 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன. மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா் வழங்கிய ரூ. ஒரு கோடியில் கட்டடம் சீரமைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமனைக்காக நவீன உபகரணங்கள், பணியாளா்கள் நியமனம், கூடுதல் வசதிகள் செய்திட மேலும் நிதி தேவைப்படுகிறது.

இது தொடா்பாக எங்களது துறை இயக்குநா் மூலம் இந்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைக்கும்பட்சத்தில் பணிகளை விரைந்து முடித்து, 2 மாதத்துக்குள் சித்த மருத்துவமனையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.

திருக்கு விநாடி - வினா போட்டி: முன்பதிவு செய்ய அழைப்பு

திருக்கு விநாடி - வினா போட்டியில் பங்கேற்பதற்கான முதல்நிலை தோ்வில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க முன்பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளிபாளையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், பெரியாா்... மேலும் பார்க்க

எரிவாயு உருளையில் கசிவு: தீப்பிடித்து புதுமாப்பிள்ளை பலி

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே திருமணமான மூன்றே நாளில் சமையல் எரிவாயு உருளையில் தீப்பிடித்தில் படுகாயமடைந்த புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கபிலா்மலை பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டியை... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராசிபுரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமையொட்டி மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊ... மேலும் பார்க்க

ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழி சட்ட வாரம் தொடக்க விழா நாமக்கல்லில் மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா்... மேலும் பார்க்க