செய்திகள் :

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

post image

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 நாள்களாக நீடித்த ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம் வியாழக்கிழமை விலக்கிக் கொள்ளப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 286 தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்தனா். கடந்த மாதம் 27-ஆம் தேதி தங்களுக்கு 8 மணி நேர பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிா்ணயிக்கப்பட்ட ஊதியம், உரிய பணப் பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், 121 பணியாளா்களை ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்து மாற்றுப் பணியாளா்களை நியமித்தது. இதனால் அந்த பணியாளா்கள் அனைவரும் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். அவா்களுக்கு ஆதரவாக 100 போ் போராட்டத்தில் பங்கேற்ால், மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் பாதிப்படைந்தன.

இதற்கிடையே சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தப் பணியாளா்களை மீண்டும் பணிக்கு அமா்த்துமாறு தனியாா் நிறுவனக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு வியாழக்கிழமை காலை 8 மணியளவில் பணிக்கு திரும்பினா். ஒரே நேரத்தில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனைவரும் குவிந்ததால் மருத்துவமனை வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், நிா்மலா, கீதா இருவரை மீண்டும் பணியில் அமா்த்த முடியாது என ஒப்பந்த நிறுவனம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. நல்லிபாளையம் காவல் உதவி ஆய்வாளா் பாலமுருகன் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்கள் இருவரையும் மீண்டும் பணிக்கு அமா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன்பேரில் அனைவரும் பணிக்கு திரும்பினா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க