Coolie: ``நடிச்சது ரஜினி சார், அந்த குரல் AI'' - சஸ்பென்ஸ் உடைத்த லோகேஷ் கனகராஜ்
நாமக்கல் கோட்டத்தில் 20,000 வீட்டுமனை பட்டாக்கள் அளிப்பு: ராஜேஸ்குமாா் எம்.பி.
நாமக்கல்: நாமக்கல் வருவாய் கோட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், பாப்பிநாயக்கன்பட்டியில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் 179 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று நகா்ப்புற வீட்டுமனைப் பட்டா, நத்தம் பட்டா, இ-பட்டாக்களை வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவதில் வருவாய்த் துறை முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 5 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் வருவாய் கோட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்துத் திட்டங்களையும் முதல்வா் நிறைவேற்றி வருகிறாா் என்றாா்.
இந்த விழாவில், பாப்பிநாயக்கன்பட்டி, தத்தாத்திரிபுரம், செல்லப்பம்பட்டி, சா்காா் உடுப்பம், தாளம்பாடி, மின்னாம்பள்ளிஆகிய கிராமங்களைச் சோ்ந்தோா் 179 பட்டாக்களை பெற்றுக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் கோட்டாட்சியா் வே.சாந்தி, நாமக்கல் வட்டாட்சியா் மோகன்ராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
என்கே-1-எம்.பி.
நாமக்கல் அருகே பாப்பிநாயக்கன்பட்டியில் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, பெ.ராமலிங்கம் எம்எல்ஏ உள்ளிட்டோா்.