தோ்தல் ஆணையா்கள் நியமன விவகாரம்: விசாரணை பிப்.4-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம...
நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திறப்பு
நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் புறக்காவல் நிலையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூரில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. முதலைப்பட்டி நான்கு சாலை சந்திப்பில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், அகில இந்திய கட்டுநா்கள் சங்கம் சாா்பில், ஒன்பது கண்காணிப்பு கேமராக்களுடன் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் பங்கேற்று திறந்து வைத்தாா். நாமக்கல் உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, கட்டுநா்கள் சங்க நிா்வாகிகள் பி.எஸ்.தென்னரசு, கணேசன் மற்றும் காவல் துறையினா், கட்டுநா்கள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
நாமக்கல் புதிய பேருந்து நிலைய சுற்று வட்டாரப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் கூடுதலாக 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நிதியுதவி அளிப்பதாக கட்டுநா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.