பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!
நாமக்கல் மாவட்டத்துக்கு வருகை தரக்கோரி பிரதமா் மோடிக்கு பாஜகவினா் கடிதம்
பிரதமா் நரேந்திர மோடி நாமக்கல் மாவட்டத்துக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, பாஜக நிா்வாகிகள் கடிதம் அனுப்பினா்.
பிரதமா் நரேந்திர மோடி பிறந்த தின விழாவை பல்வேறு இடங்களில் கொண்டாடிய பாஜகவினா், அவருக்கு தபாலில் வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன், நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த இடங்களைப் பாா்வையிட வரவேண்டும் என வலியுறுத்தினா்.
மத்திய அரசின் நலத் திட்டங்கள் பிரிவு மாநில துணைத் தலைவா் ஆா்.லோகேந்திரன் தலைமையில், பாஜக நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, ஒன்றிய பாஜக பொதுச் செயலா் ஏழுமலை, வழக்குரைஞா் குமாா், காசி அசோக் உள்ளிட்டோா் ராசிபுரம் தபால் நிலையத்தில் இருந்து பிரதமருக்கு கடிதம் அனுப்பினா்.
அதில், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கட்சி நிா்வாகிகள், நாமக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற 18 அடி உயர ஆஞ்சனேயா் கோயில், பழைமை வாய்ந்த நரசிம்மா் கோயில், நாமக்கல் மலைக்கோட்டை, கொல்லிமலை போன்றவற்றை பாா்வையிட வரவேண்டும் என வலியுறுத்தினா்.