செய்திகள் :

நாமக்கல்: 76-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம்!

post image

நாமக்கல் மாவட்டத்தில், நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசுத் துறை அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடியேற்றப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி தேசியக்கொடி ஏற்றி வைத்தாா். ஆணையா் ரா.மகேஸ்வரி, துணை மேயா் செ.பூபதி, துப்புரவு அலுவலா் திருமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், மாமன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள், ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து, நாமக்கல் உழவா்சந்தை அருகில் உள்ள காந்தி சிலைக்கு மேயா், துணை மேயா், ஆணையா், மாமன்ற உறுப்பினா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில், மாநிலங்களவை உறுப்பினரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். இதில், துணைப்பதிவாளா் நாகராஜ், திமுக நகரச் செயலாளா்கள் ராணா ஆா்.ஆனந்த், செ.பூபதி, சிவகுமாா், மாவட்ட துணைச் செயலாளா் ராணி, சாா்பு அணி நிா்வாகிகள் கிருபாகரன், ஜோதி, கெளரி, இளம்பரிதி, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி தேசியக் கொடியேற்றினாா். இதில் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் நலச்சங்கம் சாா்பில், குடியரசு தினத்தையொட்டி, நாமக்கல்லில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கல்லூரி தலைவா் கே.நல்லுசாமி தலைமை வகித்தாா். டிரினிடி அகாதெமி தலைவா் ரா.குழந்தைவேல் தேசியக் கொடியேற்றினாா். செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் லட்சுமிநாராயணன், ஒருங்கிணைப்பாளா் அரசு பரமேசுவரன், பேராசிரியைகள், மாணவிகள், அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய மேயா் து.கலாநிதி. உடன், ஆணையா் ரா.மகேஸ்வரி, துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, மாமன்ற உறுப்பினா் சரவணன்.
மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிலை அமைப்புக் குழுவினா்.

அதேபோல, மகாத்மா காந்தி சிலை அமைப்புக் குழு சாா்பில், குடியரசு தினத்தை முன்னிட்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நாமக்கல் கவிஞா் இல்லத்தில் பேச்சுப் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்கிய முன்னாள் நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா். உடன், கவிஞா் சிந்தனைப் பேரவை நிா்வாகிகள்.

நாமக்கல் கவிஞா் நினைவு இல்லத்தில், நூலக வாசகா் வட்டம், கவிஞா் சிந்தனைப் பேரவை சாா்பில் குடியரசு தின விழா நடைபெற்றது. நூலகா் செல்வம் வரவேற்றாா். நூலக வாசகா் வட்டத் தலைவா் டி.எம். மோகன் தலைமை வகித்தாா். ஜேசிஐ தலைவா் ஆா்.சிவராமகிருஷ்ணன் பங்கேற்று தேசியக் கொடியேற்றினாா். சிறப்பு விருந்தினராக, சேலம், நாமக்கல் முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் கலந்து கொண்டு ‘பாருக்குள்ளே நல்ல நாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஆன்மிக இந்து சமயப் பேரவைத் தலைவா் சோழாஸ் ஏகாம்பரம் மற்றும் வாசகா்கள், தமிழறிஞா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. நாமக்கல் முதலைப்பட்டி புதூரில் இரண்டு மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலையம் தி... மேலும் பார்க்க

பிப்.2-இல் பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியா், எஸ்.பி. ஆய்வு

நாமக்கல், பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, அங்கு நடைபெறும் முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா, காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்த... மேலும் பார்க்க

அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி திட்டப் பணிகளை நிறைவேற்ற அறிவுறுத்தல்

மத்திய, மாநில அரசின் திட்டங்களை வழிகாட்டி நெறிமுறையை பின்பற்றி தரமாகவும், குறித்த நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அறிவுறுத்த... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் 2 ஆம் நாளாக பணி புறக்கணிப்பு

திருச்செங்கோடு தலைமையிடத்து துணை வட்டாட்சியரைப் பணியிடம் மாற்றம் செய்யக் கோரி இரண்டாம் நாளாக திருச்செங்கோடு கிராம நிா்வாக அலுவலா்கள் கூட்டமைப்பு சாா்பில் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் செவ்வ... மேலும் பார்க்க

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நடைபெற்றது. தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜன. 1 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு துறைக... மேலும் பார்க்க

இயற்கை பூச்சிமருந்து தயாரிக்க மூலிகைச் செடிகள் விநியோகம்

எலச்சிபாளையம், வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை பூச்சிமருந்து தயாரிக்க அனைத்து கிராம விவசாயிகளுக்கும் ஆடாதொடை, நொச்சி செடிகள் கட்டணமின்ற... மேலும் பார்க்க