செய்திகள் :

நாம் வென்று விட்டோம்..! கிங்டம் வசூல் வேட்டைக்கு விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!

post image

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் முதல்நாளில் ரூ.39 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி எனும் திரைப்படத்தில் அர்ஜுனர் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் திரைப்படம் நேற்று (ஜூலை 31) உலகம் முழுவதும் வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இருப்பினும் வசூலில் அசத்தியுள்ளது.

உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.39 கோடி வசூலித்தது அசத்தியுள்ளது. இதனைப் பகிர்ந்த விஜய் தேவர்கொண்டா, “நாம் வென்றுவிட்டோம்” என தெலுங்கில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஹிந்தியில் விழா எதுவும் இல்லாத நாளில் வெளியாகி இவ்வளவு வசூலித்துள்ளது என படக்குழு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

சமந்தாவுடன் நடித்த குஷி திரைப்படம் முதல் மூன்று நாளில் ரூ.70 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

ஜவான் படத்துக்காக தேசிய விருது பெற்ற ஷாருக் கான் குறித்து இயக்குநர் அட்லீ நீண்டதாக காதல் கடிதம் போல நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக் கான் முதல்முதலாக ஜவான் படத்தின்மூல... மேலும் பார்க்க

மத நல்லிணக்கம் பேசிய அயோத்திக்கு தேசிய விருது தராதது ஏன்?

நடிகர் சசிகுமார் நடிப்பில் 2023-இல் வெளியான அயோத்தி படம் ஒரு தேசிய விருதுகூட பெறாதது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படம் தமிழில் மிகு... மேலும் பார்க்க

ஆடுஜீவிதம் எதனால் தேசிய விருது பெறவில்லை? ரசிகர்கள் ஆதங்கம்!

ஆடுஜீவிதம் திரைப்படம் எதனால் தேசிய விருது பெறவில்லை தேர்வுக்குழுமை சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடுஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே ... மேலும் பார்க்க

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பறந்து போ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மிதுல் ரியான் நடிப்பில் வெளியான ‘பறந்து போ’ திரைப்படம... மேலும் பார்க்க

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

2023 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இவற்றில் சிறந்த இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் (வாத்தி படத்துக்காக) விருது பெற்றுள்ளார்.இரண்டாவது முறையாக தேசிய விருத... மேலும் பார்க்க