சென்னையில் அதிகனமழை: ஜெர்மனியிலிருந்து மழை பாதிப்பு குறித்து தொலைபேசியில் கேட்டற...
நாய் கடித்தால் அலட்சியம் காட்ட வேண்டாம்! ஆட்சியா் அறிவுறுத்தல்!
நாய் கடித்தால் பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது: நாய் கடித்த இடத்தை 15 நிமிஷங்கள் வரை சோப்பு மற்றும் ஓடும் நீா் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இது நோய்ப் பாதிப்பை குறைக்கும் முக்கிய நடவடிக்கையாகும். நாய் கடியால் ஏற்பட்ட புண்ணின் வகைக்கேற்ப அதற்கான சிகிச்சை முறையும் வேறுபடும் என்பதால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
எனவே, அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை மற்றும் தகுந்த நோய்த் தடுப்பு சிகிச்சை முறையை எடுத்து கொள்ள வேண்டும்.
முதல் நாள், 3-ஆவது நாள், 7-ஆவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் போட்டு கொள்ள வேண்டும். வெறிநாய்க் கடிக்கான சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக அளிக்கப்படுகிறது.
மேலும், தீவிர நாய் கடிக்கான ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் ஊசி மருத்துவரின் ஆலோசனையின் படி அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.
எனவே, நாய் கடித்தால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை பெற்று உயிரிழப்பை தடுத்து கொள்ளுமாறு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.