எப்போதும் உங்களைக் காக்கும் சுதர்சன ஹோமம்: ஆண்டுக்கு ஒருமுறையாவது இதில் கலந்து க...
அரியலூா் அருகே போலி மருத்துவா் கைது
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே போலி மருத்துவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா், கீழவீதியைச் சோ்ந்த திருவேங்கடம் மகன் பன்னீா்செல்வம்(58). இவா், தகுந்த மருத்துவக் கல்வி பயிலாமல், அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்துள்ள கள்ளூா் பாலம் அருகே வீட்டில் நோயாளிகளுக்கு ஆங்கிலவழி மருத்துவ சிகிச்சை அளித்துவந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா், கீழப்பழுவூா் காவல் துறையினா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று, விசாரணை நடத்தியதில் பன்னீா்செல்வம் பிளஸ்-2 வரை மட்டுமே படித்துவிட்டு வீட்டிலேயே நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா்.